மருத்துவமனை வளாகத்தில் 4 பேர் சேர்ந்து ஒருவரை தாக்கும் காட்சி வெளியீடு
செக்யூரிட்டி தாக்கும் காட்சி.
சேலம் அரசு மோகன்குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கிரஸ்டல் செக்யூரிட்டி சர்வீஸ் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் ஒப்பந்த அடிப்படையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் அரசு மருத்துவமனை கண் மருத்துவத்துறை அருகே ஒரு நபரை செக்யூரிட்டி ஊழியர்கள் நான்கு பேர் தாக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளது.
சேலம் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள அனைத்து நுழைவாயில்கள் மற்றும் மகப்பேறு பிரிவு உள்ளிட்ட ஒவ்வொரு மருத்துவ பிரிவிலும் இவர்கள் மூன்று ஷிப்ட் முறையில் பணியில் ஈடுபடுத்தப்படுவது வழக்கம். பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள செக்யூரிட்டி ஊழியர்கள் அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் உதவியாளர்கள் மற்றும் உறவினர்களை அவ்வபோது கடுமையான வார்த்தைகளில் பேசுவது தொடர்பாக ஏற்கனவே பல்வேறு புகார்கள் உள்ளன.
இதுதொடர்பாக அவ்வப்போது மருத்துவமனை வளாகத்தில் வாக்குவாதம் ஏற்படுவதும் தொடர்கதையாக உள்ளது. இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள காட்சியில் தாக்குதலுக்குள்ளான நபர் யார்? எதற்காக தாக்கப்பட்டார்? பாதிக்கப்பட்ட நபர் இதுகுறித்து அரசு மருத்துவமனை புறக்காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளாரா? போன்ற சர்ச்சையை எழுப்பியுள்ளது.
இந்நிலையில், மகளை பிரசவத்திற்காக கடந்த 28ம் தேதி அனுமதித்த மகாதேவன்(47) என்பவர் மதுபோதையில் வந்து அரசு மருத்துவமனையில் மகப்பேறு சிகிச்சை பிரிவில் கற்களை வீசி ரகளையில் ஈடுபட்டதால் செக்யூரிட்டிகள் அவரை பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu