அனைவரும் தடுப்பூசி செலுத்த வலியுறுத்தி இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி

அனைவரும் தடுப்பூசி செலுத்த வலியுறுத்தி இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி
X

சேலத்தில் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்த வலியுறுத்தி நடைபெற்ற இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி.

சேலத்தில் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்த வலியுறுத்தி இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைெபற்றது.

கொரனோ நோய் தொற்றிலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி அரசு மற்றும் தன்னார்வ அமைப்பினர் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக சேலம் மாநகர காவல்துறை மற்றும் தன்னார்வலர்கள் சார்பில் தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் அவசியம் விளக்கும் வகையில் இரு சக்கர வாகன விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை சேலம் சூரமங்கலம் காவல் உதவி ஆணையாளர் நாகராஜன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

அழகாபுரம் பகுதியில் தொடங்கிய இந்த பேரணி அஸ்தம்பட்டி, நீதிமன்ற சாலை, கோரிமேடு வழியாக ஏற்காடு அடிவாரம் பகுதியில் நிறைவு பெற்றது. இந்தப் பேரணியில் தடுப்பூசி அவசியம் குறித்த துண்டு பிரசுரங்கள் மற்றும் பதாகைகளை ஏந்தியவாறு பேரணியாக வந்தனர்.

Tags

Next Story
பவானிசாகர் தொகுதியில் புதிய குடிநீர் திட்டங்கள்: 1 கோடி வளர்ச்சி பணிகள் ஆரம்பம்