சேலத்தில் அமைச்சர் நிகழ்ச்சியால் வாகன ஓட்டிகள் அவதி

சேலத்தில் அமைச்சர் நிகழ்ச்சியால் வாகன ஓட்டிகள் அவதி
X

சேலத்தில் நடைபெற்ற அமைச்சர் நிகழ்ச்சியால் இருசக்கர வாகனங்களை, வரிசையில் நிற்கவைத்து சாலையில் தடுப்பு அமைத்த காவல்துறையினர்.

சேலத்தில் நடந்த அமைச்சர் நிகழ்ச்சியில், சாலையில் தடுப்பு அமைத்த காவல்துறையினரால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர்.

சேலம் இரண்டாவது அக்ரஹாரம் பகுதியில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி தலைமையில் பட்டு கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் கைத்தறி நெசவாளர்கள் கலந்துரையாடல் கூட்டம், இன்று நடைபெற்றது.

இந்தக் கூட்டத்திற்கு அமைச்சர் வருகை தந்ததையொட்டி, இரண்டாவது அக்ஹகாரம் சாலையின் நுழைவாயில் பகுதியில் காவல்துறையினர் இருசக்கர வாகனங்களை வரிசையாக நிற்க வைத்து, தடுப்பு அமைத்து வாகன ஓட்டிகள் செல்லாதவாறு மாற்று வழி ஏற்படுத்தினர்.

இதனால், சேலம் இரண்டாவது அக்ரஹாரம் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் வந்த வாகன ஓட்டிகளை மாற்று வழியில் திருப்பி அனுப்பினர். இதனால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர்.

Tags

Next Story
வெப்சைட் ஓபன் பண்ண தெரியலையா? இதோ ஈஸியா கத்துக்கோங்க!