சேலத்தில் பள்ளி ஆசிரியர்களுக்கான சிறப்பு தடுப்பூசி முகாம்

சேலத்தில் பள்ளி ஆசிரியர்களுக்கான சிறப்பு தடுப்பூசி முகாம்
X

தடுப்பூசி செலுத்தி கொள்ளும் ஆசிரியர்.

சேலத்தில் நடைபெற்ற பள்ளி ஆசிரியர்களுக்கான சிறப்பு தடுப்பூசி முகாமில் ஏராளமான ஆசிரியர்கள் ஆர்வமுடன் வந்து தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

கொரோனோ பெருந்தொற்று காரணமாக கடந்த ஒன்றரை வருடமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. தற்போது கொரோனோ குறைந்து வருவதன் காரணமாக வரும் செப்டம்பர் 1 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன்படி 9, 10, 11, 12ம் வகுப்புகளுக்கு சுழற்சிமுறையில் வகுப்புகள் நடைபெறும் என்றும், பள்ளிக்கு வரும் ஆசிரியர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக் கொண்டிருக்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது.

இதனடிப்படையில் சேலம் மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தி கொள்ளாத ஆசிரியர்களுக்கு தடுப்பூசி செலுத்தி கொள்ளும் வகையில் மாவட்டம் முழுவதும் வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிறப்பு தடுப்பூசி முகாம் இன்று ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த முகாமில் பள்ளி ஆசிரியர்கள் ஆர்வமுடன் வந்து தங்களுக்கு தேவையான கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பு ஊசியை செலுத்தி கொண்டு சென்றனர். குறிப்பாக சேலம் மாநகர் குமாரசாமிப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று காலை முதல் நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஆர்வமுடன் வந்து கூட்ட நெரிசல் இல்லாமல் தடுப்பூசி செலுத்திக் கொண்டு சென்றனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!