சேலம் பூம்புகார் விற்பனை நிலையத்தில் இன்று சிறப்பு கண்காட்சி தொடக்கம்

சேலம் பூம்புகார் விற்பனை நிலையத்தில் இன்று சிறப்பு  கண்காட்சி தொடக்கம்
X

விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள விநாயகர் பொம்மைகள்.

சேலம் பூம்புகார் விற்பனை நிலையத்தில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு கண்காட்சி இன்று தொடங்கியது.

தமிழக அரசின் கைத்திறன் தொழில்கள் வளர்ச்சிக் கழகம், அனைத்து ஏழைக் கைவினைஞர்களின் கைவண்ணத்தில் தயாரான படைப்புகளுக்கு சந்தை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் விழாக் காலங்களில் சிறப்பு விற்பனைக் கண்காட்சிகளை நடத்தி வருகிறது.

அதன் அடிப்படையில், சேலம் மாநகரில் உள்ள பூம்புகார் விற்பனை நிலையத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு "கணபதி தரிசனம்" என்ற சிறப்பு விற்பனை மற்றும் கண்காட்சி துவங்கப்பட்டுள்ளது.

இன்று முதல் 15 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இக்கண்காட்சியில், பஞ்சலோகம், பித்தளை, வாகை மர சிற்பங்கள், சந்தன மர சிற்பங்கள் போன்ற மூலப் பொருள்களால் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகள், கருப்பு உலோகம், வெள்ளை உலோகம், மார்பில் துகில் விநாயகர், தஞ்சாவூர் ஓவியம், கலை தட்டுகளில் செய்யப்பட்ட விநாயகர், பல்வேறு வகை வண்ண வடிவங்களில் விநாயகர் சிலைகள் கண்காட்சியில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

இக்கண்காட்சியில் ரூ. 150 முதல் ரூ. 54,000 வரை உள்ள விநாயகர் சிலைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும் குறிப்பிட்ட பொருள்களுக்கு 10% தள்ளுபடி வழங்கப்படுகிறது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!