இரண்டு கிட்னியும் செயலிழந்த சிலம்பாட்ட வீராங்கனை முதல்வருக்கு வேண்டுகோள்
சிலம்பாட்ட வீராங்கனை ஜனனி
சேலம் அரிசிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி ராஜ நந்தினி இவர்களுக்கு ஜனனி என்ற 15 வயதுடைய பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் ஜனனி சிறு வயது முதலே விளையாட்டின் மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக வில்வித்தை, ஸ்கேட்டிங் மற்றும் சிலம்பாட்டப் போட்டிகளில் மாநில அளவில் பல்வேறு பரிசுகளை பெற்றுள்ளார்.
இந்தநிலையில் 2019ஆம் ஆண்டு வீட்டில் மயங்கி விழுந்த சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவரது இரண்டு கிட்னியும் செயல் இழந்து இருப்பதாக அதிர்ச்சி தகவல் கொடுத்துள்ளனர். இதனையடுத்து தாய் தனது ஒரு கிட்னியை கொடுத்துள்ளார். ஆனால் அதுவும் குறிப்பிட்ட சில நாட்களில் செயல் இழந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மகள் நோய்வாய்ப் பட்டதை அறிந்த தந்தையும் அவர்களை விட்டுப் பிரிந்து சென்று விட்டார்.
இதனால் தாயுடன் பல்வேறு சிரமங்களுக்கிடையே ஜனனி அழகாபுரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். இவரது நிலைமையை உணர்ந்த பள்ளி நிர்வாகமும் இரண்டு ஆண்டுகளுக்கு பள்ளி கட்டணம் ஏதும் செலுத்த வேண்டாம் என தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் மேல் சிகிச்சைக்கு வழியில்லாமல் தமிழக முதலமைச்சருக்கு உருக்கமான வீடியோ செய்தி ஒன்றை ஜனனி அனுப்பி உள்ளார். அதில் மிகவும் உருக்கமாகவும் வேறுவழியில்லாமல் முதலமைச்சரிடம் உதவி கேட்பதாகவும் முதலமைச்சர் அவர்கள் உதவ வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். அவரது வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu