சேலத்தில் ஏப்ரல் 1 ம் தேதி உதயநிதிஸ்டாலின் பிரச்சாரம்

சேலத்தில் ஏப்ரல் 1 ம் தேதி உதயநிதிஸ்டாலின் பிரச்சாரம்
X

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வரும் 1 ம் தேதி சேலத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வரும் ஏப்ரல் 1 ம் தேதி சேலம் மத்திய மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார். அன்று காலை 11 மணிக்கு சேலம் தெற்கு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து தாதகாப்பட்டியை அடுத்த பில்லுக்கடை மைதானத்தில் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். தொடர்ந்து மாலை 4 மணிக்கு, சூரமங்கலம் உழவர்சந்தை அருகே சேலம் மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் சேலத்தாம்பட்டி ராஜேந்திரனுக்கு ஆதரவாகவும், மாலை 5 மணிக்கு கன்னங்குறிச்சியில் சேலம் வடக்கு தொகுதி திமுக வேட்பாளர் ராஜேந்திரன் எம்எல்ஏவுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரிக்கிறார்.

எனவே இந்த பிரச்சார நிகழ்ச்சிகளில் பொதுமக்களும், திமு கழக நிர்வாகிகளும் பெருமளவில் கலந்து கொள்ளும் வகையில், சிறப்பான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என திமுக நிர்வாகிகளுக்கு மத்திய மாவட்ட திமுக செயலாளர் ராஜேந்திரன் எம்எல்ஏ அறிவுறுத்தியுள்ளார்.

Tags

Next Story
ai marketing future