சேலம்: சித்த மருத்துவ சிகிச்சை மையத்தில் கூடுதலாக 100 படுக்கைகள்
முதல் நிலை கொரோனா தொற்று உள்ள நபர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சேலம் கோரிமேட்டில் உள்ள அரசு மகளிர் கலைக் கல்லூரியில் சித்த மருத்துவ மையம் செயல்பட்டு வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் 12ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த மையத்தில் 100 படுக்கை வசதிகள் உள்ளன. இந்த நிலையில் சித்த மருத்துவ மையத்தில் கூடுதலாக 100 படுக்கைகள் அமைக்க தமிழக மருத்துவத் துறை அமைச்சர் சுப்பிரமணியம் மற்றும் மின்சார மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் உத்தரவிட்டனர். அதன்படி அரசு மகளிர் கலைக் கல்லூரி வளாகத்தில் ஏற்கனவே செயல்படும் சித்த மருத்துவ மையத்தில் கூடுதலாக 100 படுக்கைகள் கொண்ட புதிய சிகிச்சை பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இன்று முதல் இந்த பிரிவில் முதல் நிலை கூறப்பட்டு உள்ள நோயாளிகள் சிகிச்சைக்காக அனுமதிக்கப் படுவார்கள் என்று சித்த மருத்துவ பிரிவு மருத்துவ அலுவலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இயங்கிவரும் சித்த மருத்துவ மையத்தில் இதுவரையில் 629 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 460 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 72 பேர் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் 97 பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu