கொரோனா மருந்து வாங்குபவர் விவரத்தை சொல்லுங்க! மருந்தகங்களுக்கு சேலம் மாநகராட்சி உத்தரவு

கொரோனா மருந்து வாங்குபவர் விவரத்தை சொல்லுங்க! மருந்தகங்களுக்கு சேலம் மாநகராட்சி உத்தரவு
X

சேலம் மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் தலைமையில், மருந்து விற்பனை நிலைய உரிமையாளர்கள், மருந்தாளுநர்களுடன்  ஆலோசனை கூட்டம் சேலத்தில் நடைபெற்றது.

தொற்று அறிகுறி மருந்துகள் வாங்குபவர்களின் விவரங்களை, மருந்து விற்பனை நிலையங்கள் சேலம் மாநகராட்சிக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று, மாநகராட்சி ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார்.

சேலம் மாநகராட்சி பகுதியில் உள்ள மருந்து விற்பனை நிலையங்களின் உரிமையாளர்கள் மற்றும் மருந்தாளுநர்களுடன், கொரோனோ தடுப்பு நடவடிக்கைகளை தீவிர படுத்துதல் தொடர்பான ஆலோசனை கூட்டம், ராஜாஜி சாலை ஸ்ரீ சாரதா பாலமந்திர் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

சேலம் மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்த மருந்தாளுநர்களின் ஆலோசனைகளை கேட்டறிந்தார்.

பின்னர் மாநகராட்சி ஆணையாளர் கூறும்போது, சேலம் மாநகராட்சி பகுதியில் உள்ள மருந்து விற்பனை நிலையங்களில் மருந்து வாங்குவதற்கு அதிகளவில் மக்கள் வந்து செல்கின்றனர். அனைத்து விற்பனை நிலையங்களிலும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி அனைவரும் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை தவறாது கடைபிடிக்க வேண்டும் என்றார்.

கொரோனோ நோய் தொற்று அறிகுறிகளான காய்ச்சல், இருமல், சளி, போன்றவற்றிற்கு மருந்து மாத்திரைகள் வாங்க வருபவர்கள் அவர்களது பெயர், முகவரி மற்றும் தொலைபேசி போன்ற விவரங்களை பெற்ற பிறகே, மருந்துகளை வழங்க வேண்டும். அந்த விவரங்களை, அருகில் உள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் அலுவலர்களுக்கு உடனடியாக தெரிவிக்க வேண்டும் அல்லது மாநகராட்சியின் அலுவலர்களுக்கு feverscmccorp@gmail.com என்ற மின் அஞ்சல் வாயிலாக தெரிவிக்க வேண்டும் என்றார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!