குறைந்தபட்ச ஊதியம் அளிக்க சினிமா ஆப்ரேட்டர்கள் கோரிக்கை
தமிழ்நாடு சினிமா ஆபரேட்டர் மற்றும் பொது தொழிலாளர் நல சங்கம் சார்பில் சேலம் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
தமிழகத்தில் நோய் தடுப்பு நடவடிக்கையாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் நீட்டித்து வருகிறது. கடந்த சில மாதங்களாக திரையரங்குகள் செயல்பட விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவை நீடித்து வருவதால் தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 2,500 சினிமா ஆப்ரேட்டர்கள் மற்றும் 30 ஆயிரம் திரையரங்கு பணியாளர்கள் வேலை இழந்து ஊதியம் இன்றி தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தமிழ்நாடு சினிமா ஆப்ரேட்டர் மற்றும் பொது தொழிலாளர் நல சங்கம் சார்பில், 100 க்கும் மேற்பட்டோர் சேலம் மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் இருந்து பேரணியாக வந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். ஊரடங்கு காலத்தில் திரையரங்கு பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதிய சட்டத்தின் படி திரையரங்கு உரிமையாளர்கள் ஊதியம் வழங்க ஆவணம் செய்ய வேண்டும், திரையரங்கு தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் தொழிலாளர் நலவாரியம் மூலம் அரசு நல உதவிகள் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி, மாநில காப்பீட்டு திட்டம் உள்ளிட்ட அரசு பலன்கள் கிடைக்கவும் ஆவணம் செய்யுமாறு தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu