சேலத்தில் ராஜகணபதி திருக்கோயிலில் 8000 ஆவுர்தி சிறப்பு யாக பூஜை
சேலம் மாநகரில் பிரசித்தி பெற்ற, பழமை வாய்ந்த ஸ்ரீ ராஜகணபதி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோவிலில் கடந்த 2013 ஆம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது வெகு விமர்சையாக கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
இந்நிலையில், தொடர்ந்து 8 ஆண்டுகள் நிறைவடைந்து ஒன்பதாவது ஆண்டான இன்று, ராஜ கணபதி திருக்கோவிலில் மூலவருக்கு காலையில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதை தொடர்ந்து, இரண்டு கால யாக பூஜை நடைபெற்றது. இதில் 8,000 ஆவுர்தி மூல மந்திரங்கள் சொல்லப்பட்டு, 108 திரவியங்களைக் கொண்டு யாகம் வளர்க்கப்பட்டது.
அதனை தொடர்ந்து, ராஜ கணபதிக்கு புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு தீபாரதனை நடைபெற்றது. இதில் திரளான பொதுமக்கள், முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளி கடைப்பிடித்து சாமி தரிசனம் செய்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu