மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கல்
இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்களை வழங்கும் ஆட்சியர்.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்கள் மற்றும் மூன்று சக்கர சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் துறையில் தையல் இயந்திரம் வேண்டி வரப்பெற்ற மனுக்களின் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு தலா ரூ.6,700 வீதம் ரூ.13,400 மதிப்பிலான தையல் இயந்திரங்களை ஆட்சியர் வழங்கினார்.
மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கான தையல் இயந்திரங்கள் வழங்கும் திட்டம் 2020-2021-இல் தேர்வு பெற்ற 3 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.6,100 வீதம் ரூ.18,300 மதிப்பிலான தையல் இயந்திரங்களையும், ஒரு மாற்றுத்திறனாளிக்கு ரூ.7,650 மதிப்பிலான மூன்று சக்கர சைக்கிளும் என மொத்தம் ரூ.39,350 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu