உயர் மின்னழுத்த கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மனு கொடுக்கும் போராட்டம்

உயர் மின்னழுத்த கோபுரங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மனு கொடுக்கும் போராட்டம்
X

மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்.

விளைநிலங்களில் உயர் மின்னழுத்த கோபுரங்கள் அமைக்கப்படுவதை கண்டித்து சேலத்தில் விவசாய சங்கங்களின் கூட்டியக்கம் சார்பில் மனு.

தமிழகத்தில் உயர் மின்னழுத்த கோபுரத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய இழப்பீட்டு தொகையை காலம் தாழ்த்தாமல் விரைந்து வழங்க வலியுறுத்தியும், புதிய திட்டங்களை விளை நிலங்கள் வழியாக செயல்படுத்தாமல் சாலையோரமாக கேபிள் மூலம் செயல்படுத்த வலியுறுத்தியும், உயர்மின் கோபுரங்களுக்கு எதிரான விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில் சேலத்தில் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் சண்முகம் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான விவசாயிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர். இதேபோல் இத்திட்டத்தால் பாதிக்கப்பட்ட திருவண்ணாமலை, கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களிலும் இன்றைய தினம் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!