கொரோனா நோயாளி உதவியாளர்களை வெளியேற்றியதால் போராட்டம்
சேலம் அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு உதவியாக இருந்த உறவினர்களை மருத்துவமனை நிர்வாகம் வெளியேற்றியதால் உறவினர்கள் கொரோனா சிகிச்சை மையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு உதவியாக அவர்களது உறவினர்கள் உடன் இருந்து கவனித்து வந்தனர். இந்த நிலையில் இட நெருக்கடி, நோய் தொற்று மேலும் பரவும் அபாயம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மருத்துவமனை நிர்வாகம் நோயாளிகளின் உறவினர்களை அதிரடியாக வெளியேற்றினர்.
இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் கொரோனா வார்டு நுழைவு வாயிலை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் செவிலியர்கள் பாரபட்சம் காட்டுவதாக உறவினர்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
பொது முடக்கம் காரணமாக போக்குவரத்து சேவை இல்லாததால் தங்களது சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் அவதிப்படுவதாகவும், கொரோனா பாதிக்கப்பட்டவர்களுடன் இருந்துவிட்டு, தற்போது வீடு திரும்பினால் மற்றவர்களுக்கும் இந்நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்படும் என்றும் அச்சம் தெரிவிக்கின்றனர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு நிலவியது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu