இளைஞர்கள் கொலையை கண்டித்து விசிக ஆர்ப்பாட்டம்

இளைஞர்கள் கொலையை கண்டித்து விசிக ஆர்ப்பாட்டம்
X

அரக்கோணம் அருகே கொலை செய்யப்பட்ட இளைஞர்கள் குடும்பத்திற்கு நீதி கேட்டு சேலத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த சோகனூரில் கடந்த 7 ம் தேதி இரு தரப்பினரிடையே முன்விரோதம் காரணமாக மோதல் ஏற்பட்டது. இதில் சோகனூர் பகுதியை சேர்ந்த சூர்யா, அர்ச்சுனன் ஆகியோர் பெருமாள்ராஜா பேட்டை பகுதியை சேர்ந்தவர்களால் கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களுக்கு நீதி கேட்டு 4-வது நாளாக சோகனூர் பகுதி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், உயிரிழந்தவர்களின் உடல்களையும் வாங்க குடும்பத்தினர் மறுத்துள்ளனர்.

இந்நிலையில், இந்த கொலை தொடர்பாக குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் இன்று கண்டன போராட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கலந்து கொண்டு இந்த கொலை தொடர்பாக குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தியும், உயிரிழந்தோருக்கு நீதி கேட்டும், அவர்களது குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க கோரியும் கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Tags

Next Story
ai in future agriculture