பிரியங்கா காந்தி கைது: சேலத்தில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்

பிரியங்கா காந்தி கைது: சேலத்தில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
X

 சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காங்கிரசார்.

பிரியங்கா காந்தியை கைது செய்த பாஜக அரசை கண்டித்து சேலத்தில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

உத்திரபிரதேசம் மாநிலம் லக்கிம்பூர் பகுதியில் விவசாயிகள் போராட்டத்தில் விபத்துக்குள்ளானவர்களை பார்க்கச் சென்ற காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியைச் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இந்த கைது சம்பவத்தை கண்டித்து, நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே காங்கிரஸ் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பாஜக அரசை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்.

மாவட்ட தலைவர் பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story