இரண்டாம் நிலை காவலர்களுக்கான உடல் தகுதி தேர்வு சேலத்தில் துவங்கியது
சேலத்தில் துவங்கியது இரண்டாம் நிலை காவலர்களுக்கான உடற் தகுதி தேர்வு
தமிழக காவல் துறையில் காலியாக உள்ள இரண்டாம் நிலை காவலர்களுக்கான எழுத்துத் தேர்வு ஏற்கனவே நடைபெற்று முடிந்த நிலையில் உடல் தகுதித் தேர்வு இன்றைய தினம் மாநிலம் முழுவதும் 20 இடங்களில் துவங்கி நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்று வரும் உடல் தகுதி தேர்வில் சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த 3 ஆயிரத்து 913 நபர்கள் பங்கேற்க உள்ளனர்.
தினசரி 500 நபர்கள் வீதம் பங்கேற்க காவல் துறை சார்பில் ஏற்கனவே அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் முதல் 500 நபர்கள் இன்றைய தினம் உடல் தகுதித் தேர்வில் பங்கேற்றுள்ளனர்.
தேர்வர்களின் உயரம், எடை, மார்பளவு மற்றும் 7 நிமிடத்திள்குள் 1500 மீட்டரை கடக்கும் நபர்கள் மட்டுமே அடுத்த கட்ட தகுதி தேர்விற்கு தேர்வு செய்யப்பட்டனர்.
முறைகேட்டை தடுக்க தேர்வு முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதனை சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ அபினவ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu