தேசப்பற்றுடன் கதர் பொருட்களை அதிகளவில் வாங்க அமைச்சர் வேண்டுகோள்

சிறப்பு கதர் விற்பனையை தொடங்கி வைத்த அமைச்சர் சாமிநாதன்.
அண்ணல் மகாத்மா காந்தியடிகளின் 153 வது பிறந்தநாள் விழா மற்றும் சிறப்பு கதர் விற்பனை தொடக்க விழா சேலத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் கலந்துகொண்டு அண்ணல் காந்தியடிகளின் திரு உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனைத்தொடர்ந்து தீபாவளி சிறப்பு விற்பனையை அமைச்சர் சாமிநாதன் தொடங்கி வைத்தார்.
இதனை அடுத்து செய்தியாளரிடம் பேசிய அவர், அண்ணல் காந்தியடிகளின் 153 வது பிறந்த நாளை முன்னிட்டு கதர் கிராம தொழில் வாரியம் சார்பில் 30 சதவீத தள்ளுபடியுடன் விற்பனை நடைபெற்று வருவதாகவும் பொதுமக்கள் தேசப்பற்றுடன் கதர் பொருட்களை அதிக அளவில் வாங்க வேண்டும் என்றும் கூறினார். 75 வது ஆண்டு சுதந்திர தின கொண்டாட்டத்தை முன்னிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் காந்தியடிகள் மற்றும் சுதந்திர போராட்ட தியாகிகளை கெளரவ படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். அதனடிப்படையில் செய்தித்துறை சார்பில் சுதந்திர போராட்ட தியாகிகளின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. காந்தியடிகள் தமிழக மக்களின் வாழ்க்கையுடன் இரண்டறக் கலந்து விட்டார் என்று கூறினார்.
உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் அரசு விதிமுறைகளை பின்பற்றி கிராம சபை கூட்டம் நடைபெறும் என்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu