சேலம் கலெக்டர் அலுவலகத்திற்குள் நிரந்தர ஆதார் பதிவு மையம் திறப்பு

சேலம் கலெக்டர் அலுவலகத்திற்குள் நிரந்தர ஆதார் பதிவு மையம் திறப்பு
X

நிரந்தர ஆதார் பதிவு மையத்தை பார்வையிடும் சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம்.

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் நிரந்தர ஆதார் பதிவு மையத்தை மாவட்ட ஆட்சியர் கார்மேகம் திறந்து வைத்தார்.

இந்தியா முழுவதும் அனைத்து மக்களுக்கும் ஆதார் அடையாள அட்டை கட்டாயம் என்பதால் தமிழகத்தில் பல்வேறு அரசு ஆதார் மையம் மற்றும் தனியார் இ சேவை மையங்களில் பொதுமக்கள் ஆதார் அட்டையை பதிவு செய்து பெற்று வருகின்றனர். இந்த நிலையில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் ஆன்லைன் பதிவு மையத்திற்கு தினந்தோறும் அதிகளவு பொதுமக்கள் வருவதால் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. பொதுமக்களின் நலன்களை கருத்தில் கொண்டு, சேலம் மாவட்ட நிர்வாகம் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள் தனியாக நிரந்தர ஆதார் பதிவு மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிரந்தர ஆதார் பதிவு மையம் நிகழ்வில் கலந்து கொண்டு சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் திறந்து வைத்தார்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!