நிதி நிறுவன மோசடி வழக்கில் கோவையைச் சேர்ந்த மேலும் ஒரு வாலிபர் கைது

நிதி நிறுவன மோசடி வழக்கில் கோவையைச் சேர்ந்த மேலும் ஒரு வாலிபர் கைது
X

நிதி நிறுவன மோசடி வழக்கில் கைதான கனகராஜ்

நிதி நிறுவனம் நடத்தி பல ஆயிரம் கோடி மோசடி செய்த வழக்கில் கோவையைச் சேர்ந்த மேலும் ஒருவரை குற்றப்பிரிவு காவல்துறையினர் கைது செய்தனர்

கோவை மாவட்டம் பீளமேடு பகுதியை சேர்ந்தவர் கௌதம் ரமேஷ். இவர் நிதி நிறுவனம் நடத்தி வந்துள்ளார். இந்த நிதி நிறுவனத்தில் ஒருமுறை பணம் கட்டினால் ஒரு ஆண்டில் நான்கு மடங்காக பணம் திருப்பி தருவதாக விளம்பரம் செய்து கேரளா மற்றும் தமிழ்நாடு முழுவதும் பல ஆயிரம் பொதுமக்களிடம் பணத்தைப் பெற்று சுமார் 4 ஆயிரத்து 700 கோடி ரூபாய் வரை பணம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

பணத்தை கட்டிய பொதுமக்களுக்கு பணம் திருப்பித் தராமல் இருந்ததால், ஏமாற்றமடைந்த ஏராளமான மக்கள் கேரளா மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த நிலையில் இந்த நிதி நிறுவனத்தில் பணம் கட்டி ஏமாற்றம் அடைந்த சேலத்தை சேர்ந்த மாதேஷ் உள்ளிட்ட 70 பேர் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் சேலம் மத்திய குற்றப்பிரிவில் புகார் ஒன்றை அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் சேலம் மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்ததில், கோவையை சேர்ந்த கௌதம் ரமேஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் ஏராளமானோர் பணம் பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனையடுத்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முக்கிய குற்றவாளியான கௌதம் ரமேஷ் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்த மோசடியில் ஈடுபட்ட நபர்களை காவல்துறையினர் தேடி வந்த நிலையில் முக்கிய குற்றவாளியான கௌதம் ரமேஷின் நண்பர் கனகராஜ் கோவையில் இருப்பதாக தகவல் வந்ததையடுத்து, சேலம் மத்தியக் குற்றப் பிரிவு காவல்துறையினர் கோவை சென்று இன்று கைது செய்தனர். அவரிடமிருந்த இரண்டு ஏடிஎம் கார்டு மற்றும் இரண்டு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

மேலும் வழக்கில் தொடர்புடைய சில நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!