ரமலான் நோன்பிற்கு தேவையான பொருட்களை வழங்கினார் எம்.பி பார்த்திபன்

ரமலான் நோன்பிற்கு தேவையான பொருட்களை வழங்கினார் எம்.பி பார்த்திபன்
X

சேலத்தில் இஸ்லாமியர்கள் ரமலான் நோன்பு திறப்பதற்கு தேவையான பொருட்களை நாடாளுமன்ற உறுப்பினர் பார்த்திபன் வழங்கினார்.

நாடு முழுவதும் ரம்ஜான் பண்டிகை வரும் மே 14 ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இதையொட்டி சேலம் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள 100 பள்ளிவாசல்களில் இஸ்லாமியர்கள் நோன்பு திறப்பதற்கு தேவையான பொருட்களை சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் இன்று வழங்கினார். ஒவ்வொரு பள்ளிவாசலுக்கும் தலா 50 கிலோ அரிசி, 25 கிலோ சர்க்கரை, 5 கிலோ பேரிச்சை என 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை வழங்கினார்.

Tags

Next Story