சுங்கச்சாவடி எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை: அமைச்சர் எ.வ.வேலு

சுங்கச்சாவடி எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை: அமைச்சர் எ.வ.வேலு
X
சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களின் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளுடனான ஆய்வுக்கூட்டம், அமைச்சர் எ.வ. வேலு தலைமையில் நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில் சாலை விபத்துகளை தடுக்க 2 வழி சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றப்படும். சேலம் - உளுந்தூர்பேட்டை நான்கு வழிச்சாலை, 20 இடங்களில் இரண்டு வழி சாலையாக உள்ளது. அது, நான்கு வழிச்சாலையாக மாற்றப்படும்.

தமிழகம் முழுவதும் 25 இடங்களில் சாலைகள் மற்றும் மேம்பாலங்கள் குறித்து பொறியாளர் குழு ஆய்வு செய்து வருகிறது. குழு அறிக்கையின் அடிப்படையில் தவறு செய்த அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும்,10 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் உள்ள கிராம சாலைகளை தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் சுங்கச்சாவடிகளின் எண்ணிக்கையை குறைக்க ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எட்டுவழிச்சாலை என்பது கொள்கை முடிவு. எனவே அதுகுறித்து முதலமைச்சர் அறிவிப்பார் என்று அமைச்சர் கூறினார்.

அமைச்சர் மதிவேந்தன் மற்றும் நான்கு மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அதிகாரிகள், இதில் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி