போலி ரசீது மூலம் வரி ஏய்ப்பு செய்தால் நடவடிக்கை:அமைச்சர் மூர்த்தி எச்சரிக்கை

போலி ரசீது மூலம் வரி ஏய்ப்பு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, அமைச்சர் மூர்த்தி எச்சரித்துள்ளார்.

சேலத்தில், வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி தலைமையில், வணிகர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது. இதில், சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த பல்வேறு வணிகர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை அமைச்சரிடம் தெரிவித்தனர்.

இக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் மூர்த்தி, அனைத்து வணிக நிறுவனங்களும் நிலுவையில் உள்ள வரிபாக்கியை விரைந்து செலுத்த வேண்டும், போலி ரசீது மூலம் வரி ஏய்ப்பு செய்தால் சட்டபடி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

இக்கூட்டத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், வணிகவரி மற்றும் பத்திரப்பதிவு துறை செயலர் ஜோதி நிர்மலாசாமி, வணிகவரி முதன்மைச் ஆணையர் சித்திக் மற்றும் வணிகவரித்துறை உயர் அதிகாரிகள் மற்றும் எம்பிக்கள் எம்எல்ஏக்கள் பலர் பங்கேற்றனர்.

இதைத் தொடர்ந்து இன்றுமாலை சேலம் உள்பட 4 மாவட்டத்தை சேர்ந்த வணிகவரி மற்றும் பதிவுத்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் மூர்த்தி ஆலோசனை நடத்துகிறார்.

Tags

Next Story