மேட்டூர் அணை- டெல்டா பாசனத்திற்கு தண்ணீரை முதலமைச்சர் திறந்து வைத்தார்

மேட்டூர் அணை- டெல்டா பாசனத்திற்கு தண்ணீரை முதலமைச்சர் திறந்து வைத்தார்
X
குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.

காவிரி டெல்டா பாசனத்திற்காக, மேட்டூர் அணையிலிருந்து, முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைத்தார்.

காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது குறுவை பாசனத்திற்காக அணை 88ஆவது ஆண்டாக தாமதிக்காமல், ஜூன் 12ஆம் தேதி நீர் திறக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.


மேட்டூர் அணையின் தற்போதைய நீர்மட்டம் 96.81 அடி, நீர் இருப்பு 60.78 டி.எம்.சி

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1170 கனஅடியாக உள்ளது

மேட்டூர் அணையில் இருந்து முதலில் விநாடிக்கு 3,000 கனஅடி நீர் திறப்பு

பின்னர் படிப்படியாக தண்ணீர் திறப்பது அதிகரிக்கப்படும்

இன்று மாலைக்குள் விநாடிக்கு 10,000 கனஅடி நீர் திறக்கப்பட உள்ளது என அதினாரிகள் தெரிவித்துள்ளனர்.

நிகழ்ச்சியில் தமிழக முதல்வருடன் அமைச்சர்கள் துரைமுருகன், நேரு செந்தில்பாலாஜி,ஆட்சியர் கார்மேகம், மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் , விவசாய சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!