சேலத்தில் ஆவணி அவிட்டம் நிகழ்ச்சியில் ஏராளமானோர் பூணூல் மாற்றிக் கொண்டனர்
சேலத்தில் நடைபெற்ற ஆவணி அவிட்டம் நிகழ்ச்சியில் ஏராளமானனோர் கலந்து கொண்டனர்.
ஆடி அல்லது ஆவணி மாதங்களில் அவிட்டம் நட்சத்திரத்தினோடு கூடிய பெளர்ணமி தினத்தற்கு ஆவணி அவிட்டம் எனும் பூனுல் மாற்று பண்டிகை கொண்டாடப்படுகிறது.
ரிக், யஜூர், வேதிகள் பவுர்ணமி தினத்தன்று ஆவணி அவிட்டம் கொண்டாடுகின்றனர். சாம வேதிகள் பிள்ளையார் சதுர்த்தி தினத்தன்று ஆவணி அவிட்டம் கொண்டாடுகின்றனர். இந்த ஆவணி தினத்தன்று ஆற்றங்கரை ஓரத்திலே, குளத்திலோ, மடத்திலும் அல்லது முடியாதவர்கள் வீட்டிலும், பூணூல் மாற்றிக் கொள்வர்.
அதன் அடிப்படையில் சேலம் முதல் அக்ரஹாரத்தில் உள்ள வியாசராஜர் மடத்தில் ரிக்வேத மக்கள் ஆவணி அவிட்டம் வைபவத்தில் கலந்து கொண்டனர்.
வேத விற்பன்னர்கள் வேதங்கள் முழங்க யாகம் செய்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பின்னர் சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இன்று பூணூலை மாற்றிக்கொண்டனர்.
உபநயனம் ஆகாத குழந்தைகளுக்கு இன்று பூணூல் போட்டு கொண்டு மூன்று நாட்களில் எடுத்து விடுவார்கள். இதனைத் தொடர்ந்து புதிதாக பூணூல் மாற்றிக் கொண்டவர்கள் வேதங்கள் படித்து கடவுளை வணங்கினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu