பசும்பால், எருமைபால் கொள்முதல் விலையை உயர்த்த உற்பத்தியாளர்கள் கோரிக்கை
தமிழ்நாடு ஆவின் பிரதான சங்க தொகுப்பு பால் குளிரூட்டும் நிலைய பணியாளர்கள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம்.
தமிழ்நாடு ஆவின் பிரதான சங்க தொகுப்பு பால் குளிரூட்டும் நிலைய பணியாளர்கள் சங்கத்தின் ஆலோசனைக் கூட்டம் சேலத்தில் இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்கத்தின் பொதுச் செயலாளர் ராஜேந்திரன் மற்றும் சட்ட ஆலோசகர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். தொகுப்பு பால் குளிர்விப்பானில் உள்ள குளறுபடிகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் இந்தக் கூட்டம் நடந்தது.
பின்னர் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்கத்தின் சட்ட ஆலோசகர் ராஜேந்திரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஆவின் பால் கூட்டுறவு சங்கங்களில் பால் கொள்முதல் செய்யப்படும் இடத்திலேயே பாலின் தரத்தை ஆய்வு செய்து அதற்கான ஒப்புகைச் சீட்டு வழங்க வேண்டும் எனவும், அதன் அடிப்படையில்தான் பணம் வழங்க வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும் தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி அங்கன்வாடிகளில் பாலை சேர்க்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
தொடர்ந்து பேசிய அவர் தனியார் பால் கொள்முதல் விலையை காட்டித்தான் அரசிடம் ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி வந்தோம். ஆனால் தற்போது கொரோனாவை காரணம் காட்டி தனியார் நிறுவனங்கள் பால் கொள்முதல் விலையை குறைத்துள்ளது. எனவே ஆவினுக்கு இணையாக தனியார் நிறுவனங்களும் பால் கொள்முதல் விலையை கொடுக்க வேண்டும் என்றார். மேலும் அரசு தற்போது வழங்கும் பால் கொள்முதல் விலை போதவில்லை என்ற அவர் பசும் பாலின் விலை லிட்டருக்கு 10 ரூபாயும், எருமை பாலின் விலை லிட்டருக்கு 15 ரூபாயும் உயர்த்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu