மயான கொள்ளை திருவிழா கோலாகலம்

மயான கொள்ளை திருவிழா கோலாகலம்
X
When is Mayana Kollai 2021-மயான கொள்ளை திருவிழா கோலாகலம்

When is Mayana Kollai 2021-சேலத்தில் மாசான அம்மாவாசை எனப்படும் மயான கொள்ளையில் பக்தர்கள் காளி வேடம் அணிந்தவர்கள் ஆக்ரோஷமாக ஆடு, கோழிகளை வாயில் கடித்து வந்தது பக்தர்களிடையே பரவசம்.....

ஆண்டுதோறும் மஹாசிவராத்திரி விழாவிற்கு அடுத்து வரும் மாசி அமாவாசை தினத்தில் மயான கொள்ளை விழா வெகு விமர்சியாகவும், கோலாகலமாகவும், நடத்தப்பட்டு வருகிறது. இந்த மயான கொள்ளை நிகழ்ச்சி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக சேலத்தில் மயான கொள்ளை நிகழ்ச்சி வெகு விமரிசையாக கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் மயான கொள்ளைக்காக பக்தர்கள் பதினைந்து தினங்களுக்கு முன்னரே விரதம் இருந்த பக்தர்கள் அங்காளம்மன், பெரியண்ணன், முனியப்பன், கருப்பண்ணன் உள்ளிட்ட காவல் தெய்வங்களை சிறப்பிக்கும் வகையில் அவர்களை போல பக்தர்கள் காளி வேடமணிந்து நடனமாடியபடி, சுடுகாடு நோக்கி சென்று நேர்த்திகடன் செலுத்தினர்.

அப்போது பக்தர்கள் உயிருடன் உள்ள கோழி, ஆடுகளை வாயில் கடித்து ரத்தம் சிந்த சிந்த வந்தனர். இதையடுத்து சுடுகாட்டின் வளாகத்தில் காத்திருந்த பக்தர்கள் அம்மன் வரும்போது வழி தோறும் படுத்து கொண்டனர். பக்தர்களை அம்மன் தாண்டி சென்றால் நோய், பிணி, என சகலமும் நீங்கும் எனபது ஐதீகம். பக்தர்களை தாண்டி சென்ற அம்மன் வேடமணிந்த பக்தர்கள் சுடுகாட்டில் சூறை ஆடி விரதத்தை முடித்தனர். இந்த நிகழ்ச்சியை சேலம் மற்றும் சுற்றியுள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு களித்தனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story