சேலத்தில் பள்ளிகளை தூய்மைபடுத்தும் பணி தீவிரம்

சேலத்தில் பள்ளிகளை தூய்மைபடுத்தும் பணி தீவிரம்
X

பள்ளிகளை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள தூய்மை பணியாளர்கள்.

செப்., 1 முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் சேலம் மாவட்டம் முழுவதும் பள்ளிகளை தூய்மை ப்படுத்தும் பணி தீவிரம்.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு 'ஆன்லைன்' மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு ஆன்லைன் மூலமே தேர்வுகளும் நடைபெற்றன. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு குறைந்ததை அடுத்து நோய் தடுப்பு கட்டுப்பாடுகளுடன் 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை வரும் 1-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

சுழற்சி முறையில் பள்ளிகள், கல்லூரிகள் செயல்படும் என அரசு சார்பில் அறிவிப்பு வெளியான நிலையில், சேலம் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளை திறப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தற்போது தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மாணவர்களின் நலன் கருதி, பள்ளி வகுப்பறைகள், பள்ளிகளின் சுற்றுப்புறங்கள், மைதானங்கள், பள்ளியில் உள்ள மேஜை, நாற்காலிகள் என அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது.

குறிப்பாக சேலம் கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இப்பணிகளை பணியாளர்கள் முழு வீச்சில் செய்து வருகின்றனர். மேலும் பள்ளி ஆசிரியர்கள் இன்றைய தினம் வரவழைக்கப்பட்டு வகுப்பு பாட அட்டவணை தயாரிக்கும் பணிகள் மற்றும் பள்ளி வளாகத்தில் மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நோய் தடுப்பு வழிமுறைகள், ஆசிரியர்களின் பணிகள் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.

இதனிடையே பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என அரசு ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!