போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த 4 வன ஊழியர்கள் சஸ்பெண்ட்

போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த 4 வன ஊழியர்கள் சஸ்பெண்ட்
X
சேலம் மாவட்டத்தில் வனத்துறையில் பணியில் சேருவதற்காக போலி சான்றிதழ் கொடுத்த 4 வன ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

தமிழக வனத்துறையில் கடை நிலை ஊழியர்களாக பணியில் சேரும் போதும், பதவி உயர்விற்காகவும் போலி கல்விச் சான்றிதழ்களை பலரும் கொடுத்துள்ளதாக புகார்கள் எழுந்தது.

சேலம் மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுக்கு முன் பணியில் சேர்ந்த 30 வன ஊழியர்கள் போலி சான்றிதழ்களை கொடுத்திருப்பதாக புகார் கூறப்பட்டது. இது பற்றி துறை ரீதியாக விசாரித்து நடவடிக்கை எடுக்க முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் உத்தரவிட்டிருந்தார்.

இதன்பேரில் கடந்த 2 ஆண்டுகளாக வன ஊழியர்களின் சான்றிதழ்கள் சரிபார்ப்பு பணியை தொடர்ந்து அதிகாரிகள் நடத்தி வருகின்றனர்.

இந்த வகையில் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த கல்விச் சான்றிதழ்கள் ஆய்வில், 4 வன ஊழியர்கள் போலி சான்றிதழ்களை கொடுத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து வன காப்பாளர்கள் கோபால், நிர்மலாதேவி, வனக்காவலர் பவுன்ராஜ், விலங்குகள் பாதுகாவலர் சகாயராஜ் ஆகிய 4 பேரையும் சஸ்பெண்ட் செய்து மாவட்ட வன அலுவலர் முருகன் உத்தரவிட்டார்.

தொடர்ந்து அந்த 4 பேரின் மீதும் துறை ரீதியான மேல் விசாரணை நடந்து வருகிறது. அதன் முடிவில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!