சேலம்: கோயில்களை திறக்கக்கோரி இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம்

சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் முன்பு இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தமிழகம் முழுவதும் கொரானா தொற்று காரணமாக, தளர்வுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் உள்ள கோயில்கள், நடை சார்த்தப்பட்டு, பக்தர்களின்றி வெறும் பூஜைகள் மட்டுமே நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களை உடனடியாக திறக்க வேண்டும் என்று வலியுறுத்தி, இந்து முன்னணி சார்பில் இன்று, கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதேபோல், சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், கோவில்களுக்கு முன்பாக, இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். சேலம் கோட்டை மாரியம்மன் திருக்கோயில் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்,இந்து முன்னணியின் கோட்டத் தலைவர் சந்தோஷ் குமார் தலைமை தாங்கினார்.
திருக்கோயில்களை உடனே திறக்க வேண்டும், சிறிய திருக்கோவில்கள் முதல், பெரிய கோவில்களில் வழிபாடு நடத்த பக்தர்களை அனுமதிக்க வேண்டும், கோயிலுக்கு வழங்க வேண்டிய நிதியை தாராளமாக வழங்கவேண்டும், கோயில்களில் பராமரிப்பை மேற்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி, ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கோஷம் எழுப்பினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu