சேலம்: மறுசீரமைப்பை கைவிட வலியுறுத்தி தமிழ்நாடு கிராம வங்கி ஊழியர்கள் தர்ணா

சேலம்: மறுசீரமைப்பை கைவிட வலியுறுத்தி தமிழ்நாடு கிராம வங்கி ஊழியர்கள் தர்ணா
X

கிராம வங்கிகள் மறுசீரமைப்பு திட்டத்தை கைவிட வலியுறுத்தி, சேலம் தலைமை அலுவலகம் முன்பு தர்ணாவில் ஈடுபட்ட தமிழ்நாடு கிராம வங்கி ஊழியர்கள்.

கிராம வங்கிகள் மறுசீரமைப்பு திட்டத்தை கைவிட வலியுறுத்தி, சேலத்தில் தமிழ்நாடு கிராம வங்கி ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

கிராம வங்கிகளை மறுசீரமைப்பு செய்யும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வலியுறுத்தி, தமிழ்நாடு கிராம வங்கி ஆபீஸர்ஸ் அசோசியேசன், தமிழ்நாடு கிராம வங்கி ஒர்க்கர்ஸ் யூனியன் மற்றும் தமிழ்நாடு கிராம வங்கி ரிடைரீஸ் சங்கம் சார்பில், தமிழ்நாடு கிராம வங்கியின் சேலம் மாவட்ட தலைமை அலுவலகம் முன்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது.

போராட்டத்தில், கோரிக்கை விளக்க கருப்பு பேட்ஜ் அணிந்தவாறு திரளானோர் கலந்து கொண்டு, கோரிக்கைகளை விளக்கி கண்டன கோஷங்களை எழுப்பினர். மேலும், நாடு முழுவதும் உள்ள கிராம வங்கிகளை ஒன்றிணைத்து, உரிய நிதியை வழங்கி தொடர்ந்து பொதுத்துறை நிறுவனமாகவே கிராம வங்கிகள் செயல்பட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இந்த போராட்டத்தின் வாயிலாக அரசுக்கு வலியுறுத்தப்பட்டது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!