சேலத்தில் நாளை மாபெரும் தடுப்பூசி முகாம்: வீடு வீடாக பூத் சிலிப் வழங்கும் பணி தீவிரம்

சேலத்தில் நாளை மாபெரும் தடுப்பூசி முகாம்: வீடு வீடாக பூத் சிலிப் வழங்கும் பணி தீவிரம்
X

சேலத்தில் நாளை நடைபெற உள்ள தடுப்பூசி முகாமை முன்னிட்டு பொதுமக்களுக்கு வீடு வீடாகச் சென்று பூத் சிலிப் வழங்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

சேலத்தில் நாளை நடைபெறும் மாபெரும் தடுப்பூசி முகாமை முன்னிட்டு வீடு வீடாகச் சென்று பூத் சிலிப் வழங்கும் பணிகள் தீவிரம்.

சேலத்தில் நாளை நடைபெற உள்ள மாபெரும் தடுப்பூசி முகாமை முன்னிட்டு பொதுமக்களுக்கு வீடு வீடாகச் சென்று பூத் சிலிப் வழங்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சேலம் மாவட்டத்தில் உள்ள 1,235 வாக்குச்சாவடி மையங்கள் உட்பட 1,356 மையங்களில் நாளைய தினம் 2 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடும் வகையில் மாபெரும் தடுப்பூசி முகாம் நடத்த மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

தேர்தலை போலவே 18 வயது நிரம்பிய அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போடும் வகையில் வீடு வீடாகச் சென்று, 18 வயது நிரம்பி தடுப்பூசி போடாதவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு தடுப்பூசிக்கான பூத் சிலிப் வழங்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

சேலம் மாநகர் அஸ்தம்பட்டி பகுதியில் இப்பணியை சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் துவக்கி வைத்து பொதுமக்கள் அனைவரும் இந்த முகாமினை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார். இந்த நிகழ்வில் சேலம் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கதிரவன், மாநகராட்சி ஆணையாளர் கிருஸ்துராஜ், எம்எல்ஏ ராஜேந்திரன், எம்பி பார்த்திபன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி