/* */

அரசு மருத்துவமனை உணவுப்பொருள் டெண்டரில் முறைகேடு என ஆட்சியரிடம் புகார்

உணவு பொருள் டெண்டரில், அரசு மருத்துவமனை முதல்வர் முறைகேடி புரிந்ததாக, சேலம் கலெக்டரிடம் புகார் அளிக்கப்பட்டது.

HIGHLIGHTS

அரசு மருத்துவமனை உணவுப்பொருள் டெண்டரில் முறைகேடு என ஆட்சியரிடம் புகார்
X

அரசு மருத்துவமனையில் உணவு பொருள் டெண்டர் முறைகேட்டில் ஈடுபட்டதாக, மருத்துவமனை முதல்வர் மீது புகார் கூறி, சேலம் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

சேலம் அரசு மருத்துவமனையில் நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கான புறநோயாளிகளும், உள் நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு, டெண்டர் கோரப்பட்டு, அதன் அடிப்படையில் உணவு வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஏற்கனவே ஒப்பந்தத்தை பெற்றுள்ள மகேஸ்வரி, அவரது கணவர் வெங்கடேஷ் ஆகியோர், இன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் அவர்கள் கூறியதாவது:

கடந்த ஆண்டு, அரசு மருத்துமனையில் உணவுப்பொருட்கள் சம்பந்தமாக ஒப்பந்தம் செய்யப்பட்டு, முறையாக நோயாளிகளுக்கு உணவு வழங்கப்பட்டு வந்தது. இச்சூழலில், தற்போது, புதிய ஒப்பந்தம் செய்வதற்கு டெண்டர் விடப்பட்டது. கடந்த 24ஆம் தேதி டெண்டர் சரிபார்பின்போது, மிகக்குறைந்த விலையில் அனைத்து விதமான ஆவணங்களும் சரியாக சமர்ப்பிக்கப்பட்ட]போதும், அரசு மருத்துவமனை முதல்வர், தனக்கு தேவையான நபருக்கு, அதிகவிலை கேட்டிருந்தும் ஒப்பந்தம் அளித்துள்ளனர்.

இது குறித்து கேட்டதற்கு, தங்களை விட அவருடைய விலைப்பட்டியல் குறைவாக உள்ளது என தவறான செய்தியைக்கூறி, செந்தில் முருகன் என்பவருக்கு ஒப்பந்தத்தை அளித்து முறைகேட்டில் ஈடுபட்டு உள்ளார். இது விதிகளுக்கு முரணானது. மேலும் உள்நோக்கத்தோடு செய்துள்ள மருத்துவமனை முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். குறைந்த விலையில் ஒப்பந்தம் போடப்பட்ட எனக்கு ஒப்பந்தத்தை அளிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

Updated On: 21 July 2021 7:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  2. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  3. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  4. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  5. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  6. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்
  7. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!
  8. காஞ்சிபுரம்
    ஆதிசங்கரரின் உபதேசங்களை மொழிபெயர்க்க வேண்டும்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பெண்மை சக்தியைப் போற்றும் உலக மகளிர் தின வாழ்த்துக்கள்
  10. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றுவோம்..! வல்லமை வளரும்..!