பார்வையற்ற மணமக்களுக்கு சீர்வரிசைகளுடன் இலவச திருமணம்

பார்வையற்ற மணமக்களுக்கு சீர்வரிசைகளுடன் இலவச திருமணம்
X

பார்வையற்ற மணமக்களுக்கு இலவசமாக திருமணம் நடத்தி வைக்கப்பட்டது.

தமிழ்நாடு வணிகர் சங்க பேரவையின் சார்பில் பார்வையற்ற மணமக்களுக்கு சீர்வரிசைகளுடன் கூடிய இலவச திருமணம் சேலத்தில் நடந்தது.

பார்வையற்ற 2 பட்டதாரி இளைஞர்களுக்கு தமிழ்நாடு வணிகர் சங்க பேரவையின் சார்பில் திருமண ஏற்பாடு செய்யப்பட்டு, சேலம் அழகாபுரம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சீர்வரிசை உடன் கூடிய இலவச திருமணம் நடைபெற்றது. மணமகன் பாலாஜி, மணமகள் கங்கா மற்றும் மணமகன் செந்தில், மணமகள் பழனியம்மாள் ஆகிய இரு ஜோடிகளுக்கும் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் வெள்ளையன் மாங்கல்யத்தை எடுத்து கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார். மேலும் பார்வையற்ற மணமக்களுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் சீர்வரிசையாக வழங்கினர். இந்த திருமண விழாவில் திரளான உறவினர்கள் மற்றும் தொழிலதிபர்கள் கலந்து கொண்டு பார்வையற்ற மணமக்களை வாழ்த்திச் சென்றனர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!