சேலம் நகைக்கடையில் தீ

சேலம் நகைக்கடையில்  தீ
X
சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள நகைக்கடையில் தீ: தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று அணைத்தனர்

சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே அகிலேஷ் செல்வமாளிகை எனும் பிரமாண்ட நகை கடை செயல்பட்டு வருகிறது. தற்போது மறு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் கடந்த சில நாட்களாக கடை மூடப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று மாலை கடையின் அடித்தளத்தில் இருந்து கரும்புகை வெளியானதை பார்த்த அக்கம்பக்கத்தினர் கடை உரிமையாளருக்கும் தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து உடனடியாக கடையின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர்.

கடையின் அடித்தளத்தில் உள்ள மின் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து மேல்தளத்திற்கு செல்லும் மின் ஒயர்கள் தீயில் முழுமையாக கருகியது. தீயணைப்பு வீரர்களின் துரித நடவடிக்கையால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.

இச்சம்பவம் குறித்து அழகாபுரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
அடுத்த தலைமுறைக்கு  மருத்துவத்தை கொண்டு செல்லும் Google AI for Healthcare