சேலம் மாவட்ட தொகுதிகளுக்கு ஓட்டு மெஷின்கள் அனுப்பும் பணி துவக்கம்

சேலம் மாவட்ட  தொகுதிகளுக்கு  ஓட்டு மெஷின்கள் அனுப்பும் பணி துவக்கம்
X
சேலம் மாவட்ட தொகுதிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கும் பணி துவங்கியுள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கணினி மூலம் குலுக்கல் முறையில் தேர்வு செய்து அனுப்பி வைக்கும் பணி துவங்கியுள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்களித்ததை உறுதி செய்யும் விவிபேட் இயந்திரம் ஆகியவை முதல்கட்டமாக கணினி மூலம் குலுக்கல் முறையில் பிரிக்கப்பட்டுள்ளன. சேலம் கலெக்டர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலரும் கலெக்டருமான ராமன் தலைமையில் கணினி மூலம் குலுக்கல் முறையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பிரிக்கப்பட்டு அதன் பட்டியல்கள் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கும் வழங்கப்பட்டது.

அதன்படி மாவட்டத்தில் உள்ள 11 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தலா 5142 வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் கட்டுப்பாட்டுக் கருவிகள், 5740 விவிபேட் இயந்திரங்கள் அந்தந்த தொகுதிகளுக்கு துப்பாக்கி ஏந்திய காவல்துறையினரின் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டு, பாதுகாப்பான அறையில் பூட்டி சீல் வைக்கப்படுவதோடு 24 மணி நேர காவல்துறை பாதுகாப்பு போடப்படும் என தேர்தல் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!