'எல்லாரும் ஓட்டு போடுங்க' சேலத்தில் பைக் பேரணி : கலெக்டர் துவக்கம்

எல்லாரும் ஓட்டு போடுங்க   சேலத்தில் பைக் பேரணி : கலெக்டர் துவக்கம்
X
100 சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி பைக் விழிப்புணர்வு பேரணி

சேலத்தில் 100 சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி நடைபெற்ற பைக் விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் ராமன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடக்கிறது. இதையொட்டி சேலம் மாவட்டத்தில் 100 சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தனியார் கல்வி நிறுவனம் சார்பில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி பைக் விழிப்புணர்வு பேரணி இன்றைய தினம் நடைபெற்றது. சேலம் மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் தொடங்கிய பேரணியை கலெக்டர் ராமன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்தப் பேரணி நான்கு ரோடு சந்திப்பு, ஐந்து ரோடு, அஸ்தம்பட்டி வழியாக சென்று மீண்டும் காந்தி விளையாட்டு மைதானத்தில் நிறைவு பெற்றது. இதில் 500க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ,மாணவிகள் பங்கேற்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!