'வேட்பாளர் இவ்ளோ தான் செலவு செய்யணும்' பட்டியல் வெளியிட்டார் கலெக்டர்

வேட்பாளர் இவ்ளோ தான் செலவு செய்யணும்   பட்டியல் வெளியிட்டார் கலெக்டர்
X
சேலத்தில் வேட்பாளர் செலவு செய்யும் பொருட்களுக்கான விலை பட்டியல் வெளியிடப்பட்டது.

சேலத்தில் கலெக்டர் தலைமையில் நடந்த அனைத்துக்கட்சி ஆலோசனை கூட்டத்தில் வேட்பாளர் செலவு செய்யும் பொருட்களுக்கான விலைப்பட்டியல் வெளியிடப்பட்டது.

தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த மாதம் 6 ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதி நடைமுறைக்கு வந்துள்ளது. சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தினந்தோறும் மேற்கொள்ளும் தேர்தல் செலவுகளை கண்காணிப்பதற்காக தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ள பொருட்களுக்கும் மற்றும் இதர அத்தியாவசிய பொருட்களுக்கும் சேலம் மாவட்டத்தில் நிலவும் விலையின் அடிப்படையில் நிலையான விலைப்பட்டியல் நிர்ணயம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான ராமன் தலைமையில் ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் இன்று நடைபெற்றது. இதில் அரசியல் கட்சிகளின் கருத்துகளும் கேட்கப்பட்டது. இதனை அடிப்படையாக கொண்டு நிலையான விலைப்புள்ளி பட்டியல் இறுதி செய்யப்பட உள்ளது.

தேர்தல் செலவு கணக்கு சேலம் மாவட்டத்திற்கு உட்பட்ட 11 சட்டமன்ற தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள், தாங்கள் தினந்தோறும் மேற்கொள்ளும் செலவுகளை, நிர்ணயம் செய்யப்பட்டுள்ள விலையின் அடிப்படையிலேயே கணக்கு எழுத வேண்டும். தேர்தலின் போது நியமனம் செய்யப்படும் தேர்தல் செலவின மேற்பார்வையாளரிடம் கணக்குகள் ஒப்படைக்கப்படும் என கலெக்டர் ராமன் தெரிவித்தார். இதற்கான விலைப்பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!