பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஜனநாயக வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஜனநாயக வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்
X

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து, சேலத்தில், ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் இருசக்கர வாகனத்தை கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில், இருசக்கர வாகனத்தை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கும் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெட்ரோல் டீசல் விலை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்று காலத்திலும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

இந்நிலையில், பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில், சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று நூதன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது இருசக்கர வாகனத்திற்கு மாலை அணிவித்து மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்கும் விதமாக நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, மத்திய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. மத்திய அரசு உடனடியாக பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என, ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தினர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!