சேலம்: மருத்துவ உபகரணம் வழங்கிய அமெரிக்காவாழ் இந்திய மருத்துவர்கள்

சேலம்: மருத்துவ உபகரணம் வழங்கிய அமெரிக்காவாழ் இந்திய மருத்துவர்கள்
X

அமெரிக்கா வாழ் இந்திய மருத்துவ சங்கம் சார்பில்,  சேலத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு ரூ. 20 லட்சம் மதிப்பிலான ஆக்ஸிஜன் செறிவூட்டிகளை வழங்கினர்.

சேலத்தில், அமெரிக்கா வாழ் இந்திய மருத்துவ சங்கம் சார்பில், ரூ. 20 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டன.

கொரோனா பேரிடர் காலத்தில் உதவிடும் பொருட்டு தன்னார்வலர்கள் சார்பில்l பல்வேறு மருத்துவ உபகரணங்கள் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக, அமெரிக்காவாழ் இந்திய மருத்துவச்சங்கத்தின் சார்பில், சேலம் மாநகராட்சிக்கு பகுதிகளில் இயங்கி வரும் ரெட்டியூர், சுப்ரமணியநகர், கிச்சிப்பாளையம் உள்ளிட்ட நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு, தலா நான்கு ஆக்ஸிஜன் செரிவூட்கள் வழங்கப்பட்டன.

ரூபாய் 20 லட்சம் மதிப்பிலான இந்த ஆக்ஸிஜன் செரிவூட்கள், சேலம் மாநகராட்சி ஆணையாளர் கிருஸ்துராஜிடம் ஒப்படைக்கப்பட்டன.

Tags

Next Story
அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட மக்கள் நலத் திட்டங்களை விளக்கி ராசிபுரத்தில் பிரசாரம்-முன்னாள் அமைச்சா் பி.தங்கமணி