பிள்ளையாரை வணங்கி பிரச்சாரத்தை தொடங்கிய திமுக வேட்பாளர்

பிள்ளையாரை வணங்கி பிரச்சாரத்தை தொடங்கிய திமுக வேட்பாளர்
X
சேலம் வடக்கு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ராஜேந்திரன் பிள்ளையார் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்.

சேலம் மாவட்டத்தில் வடக்கு தொகுதியில் திமுக சார்பில் மத்திய மாவட்ட திமுக செயலாளர் ராஜேந்திரன் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாசலம் போட்டியிடுகிறார். 2 முன்னணி கட்சி மாவட்டச் செயலாளர்கள் நேரடியாக மோதுவதால் இந்தத் தொகுதியில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.

இந்த நிலையில் திமுக வேட்பாளர் ராஜேந்திரன் நேற்றையதினம் பொன்னம்மாபேட்டை ரயில்வே கேட் அருகே உள்ள பிள்ளையார் கோவிலில் சாமி தரிசனம் செய்து தனது பிரசாரத்தை தொடங்கினார். தில்லை நகர் பகுதியில் வீடு வீடாகச் சென்று திறந்தவெளி ஜீப்பில் இருந்தவாறு பொதுமக்களிடம் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார்.

Tags

Next Story
smart agriculture iot ai