பெட்ரோல், கேஸ் விலை உயர்வை கண்டித்து சேலத்தில் தேமுதிகவினர் ஆர்ப்பாட்டம்

பெட்ரோல், கேஸ் விலை உயர்வை கண்டித்து சேலத்தில் தேமுதிகவினர் ஆர்ப்பாட்டம்
X

பெட்ரோல் டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து,  சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தேதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலத்தில், இருசக்கர வாகனம் மற்றும் சிலிண்டருக்கு மாலை அணிவித்து இறுதி மரியாதை செலுத்தி, தேமுதிகவினர் நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்தில் பெட்ரோல், டீசல் சமையல், எரிவாயு சிலிண்டர் உள்ளிட்டவைகளின் விலை உயர்வை கண்டித்து, பல்வேறு கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பெட்ரோல் டீசல் மற்றும் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு, தேமுதிக சார்பில் நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தேமுதிக மாநில கொள்கை பரப்புச்செயலாளர் மோகன்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இதில், சிலிண்டர் மற்றும் இருசக்கர வாகனத்திற்கு மாலை அணிவித்து இறுதி மரியாதை செலுத்தியும், பெண்கள் ஒப்பாரி வைத்தும் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலை உயர்வை உடனடியாக குறைக்க வேண்டும், சாமானியர்களும் பயன்படுத்தும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை வாபஸ் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!