சேலத்தில் ஏற்றுமதியை மேம்படுத்தும் கண்காட்சியை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர்

சேலத்தில் ஏற்றுமதியை மேம்படுத்தும் கண்காட்சியை துவக்கி வைத்த மாவட்ட ஆட்சியர்
X

கண்காட்சியை சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

சேலத்தில் ஏற்றுமதியை மேம்படுத்துவதற்கான கண்காட்சி மற்றும் கருத்தரங்கை மாவட்ட ஆட்சியர் கார்மேகம் துவக்கி வைத்தார்.

சேலம் மாவட்ட தொழில் மையம், தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில் சங்கம் ஆகியவற்றின் சார்பில் ஏற்றுமதி மேம்பாடு குறித்த சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இதனையொட்டி, அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

பின்னர் கருத்தரங்கை தொடங்கி வைத்து உரையாற்றிய ஆட்சியர், தொழில்வளம் மிக்க சேலம் மாவட்டத்தில் ஏற்றுமதியை மேம்படுத்த வேண்டிய அவசியம் உள்ளதாகவும், புவியியல் ரீதியாகவும் தமிழகத்தின் அனைத்து பகுதிகள் மற்றும் வடமாநிலங்களையும் இணைக்கும் மையப் பகுதியாக உள்ள சேலம் மாவட்டத்தில் விவாசாயப் பொருட்கள், ஜவ்வரிசி, வெண்பட்டு, இரும்பு எஃகு பொருட்கள், ஜவுளி ரகங்கள் என பலவகையான பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இளம் தலைமுறை தொழில் முனைவோர் இவற்றை முறையாக அறிந்து கொண்டு ஏற்றுமதியை மேம்படுத்தும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும் என்றார். மேலும், இளம் தலைமுறை தொழில் முனைவோருக்கான ஆலோசனைகள், கடனுதவி அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றி பயன்பெற வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

இதனையடுத்து சேலம் மாவட்ட தொழில் மையம் மூலமாக நீட்ஸ் (needs) மற்றும் UYEGP ஆகிய திட்டத்தின் கீழ் கடன் பெற்றவர்களுக்கு ரூபாய் 26 லட்சம் மானியத்திற்கான காசோலைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சேலம், ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த தொழிலதிபர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story