தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
X

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பணிமாறுதல் செய்யும் முறையை கைவிட வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

ஊராட்சி செயலாளர்கள் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக பணிமாறுதல் செய்யும் முறையை கைவிட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்.

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறையில் பணியாற்றும் ஊழியர்கள் தங்களின் 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊராட்சி செயலாளர்கள் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தேவையின்றி இடமாறுதல் செய்வதை கைவிடவேண்டும். இளநிலை உதவியாளர் முதல் வட்டார வளர்ச்சி அலுவலர் வரை அவர்களின் வசிப்பிடத்திற்கு அருகாமையில் கலந்தாய்வு கூட்டம் நடத்தி பணி மாறுதல் வழங்கிட வேண்டும்.

பிற துறை பணிகளை ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் மீது திணிப்பதை கைவிடவேண்டும். சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் அனைவருக்கும் இலவச மருத்துவ பரிசோதனை நடத்தப்பட வேண்டும். அனைத்து நிலை ஊழியர்கள் மீது பிறப்பிக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை மீது விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசை கண்டித்தும், மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பினர். மாநில துணைத்தலைவர் திருவரங்கன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!