/* */

திருப்பத்தூர் செய்தியாளர்கள் மீதான தாக்குதலை கண்டித்து சேலத்தில் ஆர்ப்பாட்டம்

திருப்பத்தூரில் தொலைக்காட்சி செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக்கோரி சேலத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

HIGHLIGHTS

திருப்பத்தூர் செய்தியாளர்கள் மீதான தாக்குதலை கண்டித்து சேலத்தில் ஆர்ப்பாட்டம்
X

சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் எதிரில் அனைத்து செய்தியாளர்கள் ஒளிப்பதிவாளர்கள் மற்றும் புகைப்பட கலைஞர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருப்பத்தூர் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையின் போது, அதிமுக தொண்டர்கள் அங்கே முகாமிட்டிருந்தனர். அப்போது, காவல்துறையினருடன் அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதனைத்தொடர்ந்து அங்கு செய்தி வழங்கிக்கொண்டிருந்த தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்களையும் பணி செய்யவிடாமல் தடுத்து அவர்கள் மீது அத்துமீறி தாக்குதல் நடத்தினர்.

செய்தியாளர்கள் மீதான இந்த தாக்குதலை கண்டித்து மாவட்டந்தோறும் உள்ள செய்தியாளர் சங்கங்கள் கடும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் எதிரில் அனைத்து செய்தியாளர்கள் ஒளிப்பதிவாளர்கள் மற்றும் புகைப்பட கலைஞர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

செய்தியாளர்களை தாக்கியவர்கள் மீது தாமதமின்றி காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

Updated On: 16 Sep 2021 1:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என்னை ஆள்பவளுக்கு இன்று பிறந்தநாள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    குடும்ப பல்கலையின் தலைவர்களுக்கு திருமணநாள்..! வாழ்த்துகிறோம்...
  3. லைஃப்ஸ்டைல்
    50 ஆண்டு திருமண வாழ்க்கை எனும் பொன்விழா! வாழ்த்தலாம் வாங்க
  4. ஈரோடு
    அந்தியூர் அருகே மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து டிரைவர் உயிரிழப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    அம்மா அப்பாவுக்கு திருமண நாள் வாழ்த்து கவிதைகள்
  6. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 1 தேர்வில் 92.58 சதவீதம் மாணவர்கள்...
  7. திருத்தணி
    திருத்தணி ஆர்கே பேட்டை அருகே கஞ்சா கடத்திய 3 பேர் கைது
  8. சோழவந்தான்
    உலக நன்மைக்காகவும் மழை வேண்டியும் சோழவந்தானில் யாகம்..!
  9. திருத்தணி
    சரக்கு வாகன ஓட்டுனரை வெட்டி வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையன் கைது
  10. நாமக்கல்
    சிபிஎஸ்இ 10, 12ம் வகுப்பு தேர்வுகளில் நேஷனல் பப்ளிக் பள்ளி 100 சதவீதம்...