சேலத்தில் திமுக கூட்டணி கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்

சேலத்தில் திமுக கூட்டணி கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்
X

சேலத்தில் மத்திய அரசை கண்டித்து திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலத்தில் மத்திய அரசை கண்டித்து திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகம் முழுவதும் இன்று மத்திய அரசை கண்டித்து கருப்புக்கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக சேலம் புதிய பேருந்து நிலையம் அருகே மத்திய அரசை கண்டித்து திமுக மற்றும் கூட்டணி கட்சி சார்பில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மத்திய மாவட்ட திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும், பெட்ரோல் - டீசல், கேஸ் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவது, வேலையின்மை போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 50 க்கும் மேற்பட்ட திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினர் கருப்பு கொடி ஏந்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், திமுக வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். பார்த்திபன் மற்றும் கூட்டணி கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!