சேலம் மாவட்டத்தில் 31 சதவீதம் பேருக்கு கொரானோ தடுப்பூசி: ஆட்சியர் தகவல்
கொரோனா விழிப்புணர்வு வீடியோ வாகனத்தை துவக்கி வைத்த சேலம் கலெக்டர் கார்மேகம்.
75வது சுதந்திர தின கொண்டாட்டத்தையொட்டி நாடு முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக இந்திய அரசின் கள விளம்பரத்துறை சார்பில் கொரோனா விழிப்புணர்வு வாகனம் மூலம் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. சேலம் மாவட்டத்தில் 75வது சுதந்திர தின கொண்டாட்டத்தையொட்டி கொரோனா விழிப்புணர்வு வாகன பிரச்சாரத்தினை மாவட்ட ஆட்சியர் கார்மேகம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்த வாகனம் சேலம் மாநகராட்சி மற்றும் ஊரக பகுதிகளான ஓமலூர், வீரபாண்டி, மேச்சேரி உள்ளிட்ட இடங்களில் பாதிப்பு அதிகம் உள்ள கிராமங்களுக்குச் சென்று பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளது. இந்த வாகனத்தில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய தகவல் ஒளிபரப்பு துறை, இணை அமைச்சர் முருகன், முதலமைச்சர், ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் தெரிவித்துள்ள கொரோனா விழிப்புணர்வு கருத்துக்கள் வீடியோ மூலம் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.
நிகழ்ச்சியை தொடர்ந்து செய்தியாளர்களிடம் சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் கூறியதாவது:
சேலம் மாவட்டத்தில் இதுவரை 31 சதவீதம் பேர் கொரோனா தடுப்பூசி போட்டு இருப்பதாகவும், நாள்தோறும் 138 மையங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்திலுள்ள 505 துணை சுகாதார நிலையங்களில் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பொதுமக்கள் தங்களது குடியிருப்புகளுக்கு மிக அருகாமையில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முடியும். செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் ஆசிரியர்களுக்கான சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் வரும் புதன்கிழமை சேலம் மாவட்டம் முழுவதும் அந்தந்த வட்டாரங்களில் நடத்த திட்டமிடப்பட்டு இருப்பதாகவும் கூறினார். இந்நிகழ்ச்சியில் சேலம் தொகுதி மக்களவை உறுப்பினர் எஸ் ஆர் பார்த்திபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu