சேலத்தில் 1591 நியாயவிலை கடைகளில் கொரோனா நிவாரண நிதி வழங்கும் பணி

சேலத்தில் 1591 நியாயவிலை கடைகளில் கொரோனா நிவாரண நிதி வழங்கும் பணி
X
முதல் தவணை கொரோனா நிவாரண நிதியை பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து நீண்ட வரிசையில் நின்று வாங்கிச் செல்கின்றனர்

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக பல்வேறு குடும்பத்தினர் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். இந்த நிலையில் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணமாக முதல் தவணையாக 2000 வழங்கும் பணி துவங்கியது.

இதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டத்தில் 10 லட்சத்து 12 ஆயிரத்து 249 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு முதல் தவணை 2 ஆயிரம் நிவாரண தொகை இன்று முதல் வழங்கும் பணி துவங்கியது.

இதனை சேலம் கன்னங்குறிச்சி பகுதியில் சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் துவக்கி வைத்தார். முதல் தவணை 2 ஆயிரம் ரூபாய் 1591 நியாயவிலைக் கடைகள் மூலமாக 202 கோடியில் 44 லட்சத்து 98 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. நியாய விலைக் கடைகள் முன்பு பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து நீண்ட வரிசையில் நின்று முதல் தவணை கொரோனா நிவாரண நிதியை பெற்று செல்கின்றனர்.

ஒரு நாளைக்கு ஒரு நியாய விலை கடைகளுக்கு 200 டோக்கன் வழங்கப்பட்டு நிவாரண நிதி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!