சேலத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் போதாது: அதிமுகவின் செம்மலை குற்றச்சாட்டு

சேலத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் போதாது: அதிமுகவின் செம்மலை குற்றச்சாட்டு
X

கோப்பு படம்

கொரோனா பரவலை கட்டுபடுத்த நடவடிக்கை எடுக்காமல், அமைச்சர்கள் முதல்வரை ஏமாற்றுவதாக, என்று அதிமுக அமைப்பு செயலாளர் செம்மலை குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக, அதிமுக அமைப்பு செயலாளர் செம்மலை, சேலத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கொரோனா நோய் பரவலை கட்டுபடுத்த நடவடிக்கை எடுக்காமல், மாவட்ட பொறுப்பாளாராக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் , தமிழக முதல்வரை ஏமாற்றுகின்றனர். எனவே, இதுகுறித்து, முதல்வர் தனி கவனம் செலுத்த வேண்டும். முதல்வரிடம் நல்ல பெயரை வாங்க அமைச்சர்கள் கொரோனா இறப்பை குறைத்து காட்டுகிறார்கள்.

அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட, கூடுதலாக கட்டணம் வசூல் செய்தால் தனியார் மருத்துவமனை மீது புகார் அளித்து உரிமம் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சேலம் மாவட்டத்தில் போதிய தடுப்பூசி இருப்பு உள்ளதாக அரசு கூறுவது முழுவதும் பொய்.

தளர்வுகளற்ற முழு ஊரடங்கை அறிவித்துவிட்டு சென்னையில் இருந்து 6 லட்சம் பேர் அவரவர் ஊர்களுக்கு செல்ல போக்குவரத்து வசதியையும் ஏற்படுத்தி கொடுத்து, கொரோனா பரவலை தமிழக அரசு அதிகரிக்கச்செய்துள்ளது. ஊரடங்கில் தளர்வு அளித்து தமிழகத்தில் தொற்று அதிகரிக்க அரசே வழிவகை செய்துள்ளது.

கொரோனா தடுப்பு குறித்த ஆலோசனையில், முறையான அழைப்பு வந்தால் அதிமுக மற்றும் கூட்டணி எம்எல்ஏக்கள் அரசு கூட்டத்தில் நிச்சயம் பங்கேற்பார்கள் என்று செம்மலை கூறினார்.

Tags

Next Story
ரூ.2 கோடி மோசடி..! துணை தாசில்தாரை ஏமாற்றிய சென்னை வாலிபர் கைது..!