கொரோனோ தடுப்பு முறைகள் பின்பற்றப்படுகிறதா? பள்ளியில் கலெக்டர் ஆய்வு

கொரோனோ தடுப்பு முறைகள் பின்பற்றப்படுகிறதா? பள்ளியில் கலெக்டர் ஆய்வு
X

சேலம் கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்.

கொரோனோ நோய்த்தொற்று தடுப்பு வழிமுறைகள் சரியாக பின்பற்றப்படுகிறதா என பள்ளிகளில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு.

தமிழ்நாடு அரசு உத்தரவின் அடிப்படையில் தமிழகம் முழுவதும் இன்று பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன. சேலம் மாவட்டத்தில் 9, 10, 11 மற்றும் 12-ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் இன்று திறக்கப்பட்டுள்ளதையொட்டி, சேலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் அரசு அறிவித்துள்ள கொரோனா நோய் தடுப்பு வழிமுறைகள் முழுமையாக பின்பற்றி வகுப்புகள் நடைபெற்று வருகின்றதா என்பதை சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அதன்படி சேலம் கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், மாவட்ட ஆட்சியர் மேற்கொண்ட ஆய்வில் பள்ளியின் வகுப்பறைக்குள் சென்று மாணவர்களிடம் சரியான முறையில் நோய்த்தொற்று வழிகாட்டு நெறிமுறைகள் கடைபிடிக்கப்பட்டுள்ளனவா என்பதை கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது முதன்மைக் கல்வி அலுவலர் முருகன் உடனிருந்தார்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!